மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
பிக்பாஸ் சீசன் 6 வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்நிகழ்ச்சிக்காக சீரியல் பார்ப்பதை கூட பலரும் நிறுத்திக்கொள்வார்கள். இந்நிலையில், இரவும் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக புதிதாக ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ள ஹிட் தொடரையே விஜய் டிவி முடித்து வைக்க உள்ளது.
விஜய் டிவியில் அண்மையில் ஒளிபரப்பாக ஆரம்பித்த புத்தம் புதிய தொடர் 'பாரதிதாசன் காலனி'. மிகக்குறுகிய காலக்கட்டத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடரானது தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு தற்காலிகமாக முடித்து வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் முந்தைய சீசனின் போதும் 'செந்தூரப்பூவே' தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், பிக்பாஸ் முடிந்த பின் மீண்டும் ஒளிபரப்பாக ஆரம்பித்த அந்த தொடரால் டிஆர்பியில் சரியாக பெர்பார்மன்ஸ் செய்ய முடியவில்லை. எனவே, அந்த தொடர் கைவிடப்பட்டது. தற்போது ஹிட் தொடராகிய பாரதிதாசன் காலனிக்கும் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதால், அதில் நடித்து வரும் நடிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். எனினும், அந்தத்தொடர் நிறுத்தப்படாமல் வேறு ஏதேனும் நேரத்தில் ஒளிபரப்பாகுமா? என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.