2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி |

பிக்பாஸ் சீசன் 5-ன் போது அதில் போட்டியாளர்களில் ஒருவராக திருநங்கை என்ட்ரியாகிறார் என்ற செய்தி வைரலானது. தொடர்ந்து யார் அந்த திருநங்கை என்ற தேடுதலில் மிளா, நமீதா மாரிமுத்து உள்ளிட்ட பல பிரபலமான திருநங்கைகளின் பெயர்கள் அடிப்பட்டது. இறுதியில் நமீதா மாரிமுத்து போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். நமீதாவுக்கு வெளியிலிருந்து மக்கள் சப்போர்ட் பெரிய அளவில் இருந்த போதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் விரைவிலேயே வெளியேறினார்.
இந்நிலையில், சீசன் 6லும் ஒரு திருநங்கை என்ட்ரி ஆக போகிறார் என்ற செய்தி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. தற்போது உள் நுழையபோகும் திருநங்கை யார் என்ற அப்டேட்டும் வெளியாகியுள்ளது. ஷிவின் கணேசன் என்ற திருநங்கை தான் இம்முறை பிக்பாஸ் வீட்டில் என்ட்ரியாக உள்ளாராம். திருநங்கையாக மாறியதால் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட ஷிவின் கணேசன் சிங்கப்பூர் சென்று பணிபுரிந்துள்ளார். தற்போது மீண்டும் இந்தியா திரும்பியுள்ள சிவின் கணேசன் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் தன் குடும்பத்தார் தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் உலா வருகிறது.