25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பிக்பாஸ் சீசன் 6 வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்கிற ஆர்வமும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் சுர வேகத்தில் எகிறி வருகிறது. இதற்கு முன்னதாக உத்தேச பட்டியலில் பல நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இம்முறை வெளியாகியுள்ள பட்டியலானது கூடுதல் நம்பகத்தன்மையுடன் இருப்பதாகவும் இந்த லிஸ்டில் இருந்து தான் நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் இணையதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இதில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான முக்கிய நட்சத்திரங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சென்ற முறை பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜிபி முத்து இம்முறை நிச்சயமாக பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரை தவிர சின்னத்திரை கவர்ச்சி புயல் தர்ஷா குப்தா, வீஜே ரக்சன், மாடல் ராம்சந்தர், ராஜலெட்சுமி - செந்தில் தம்பதியினர், சினிமா நடிகை சில்பா மஞ்சுநாத், சீரியல் நடிகை ஆயிஷா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், வீஜே அர்ச்சனா, ஜாக்குலின், தீபா சங்கர், ஸ்ரீநிதி, வீஜே மகேஸ்வரி, அந்தோணி தாசன், மைனா நந்தினி, கூல் சுரேஷ், மகேஷ், அமுதவாணன், வீஜே கதிரவன், சீரியல் நடிகர் மணிகண்டன், வடசென்னை படத்தின் கானா பாடகர் வசந்த், மெட்டி ஒலி சாந்தி ஆகியோர் என உத்தேச பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. மேலும் மக்கள் போட்டியாளர்களாகவும் 6 பேர் வரை கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த லிஸ்டில் இருந்து எத்தனை பேர் பிக்பாஸ் வீட்டில் நுழைகின்றனர் என்பதை பிக்பாஸ் லாஞ்ச் எபிசோடில் தான் உறுதியாக தெரிந்துகொள்ள முடியும்.