‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் |
ஜீ தமிழில் அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் அற்புதமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழா விடுமுறையை கொண்டாட தயாராகுங்கள்.
அக்டோபர் 4ல் ஆயுதபூஜை அன்று ‛உங்கள் வீட்டில் ஆளுமை மிக்கவர் யார்? அம்மாவா அல்லது மனைவியா?' என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 'கலைமாமணி' சுகி சிவம், பிரவீன் சுல்தானா, மோகன சுந்தரம், சாந்தாமணி மற்றும் பல முக்கியப் பேச்சாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
காலை 10.30 மணிக்கு அஜித் குமார், ஹீமா குரோஷி நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ப்ளாக் பஸ்டர் திரைப்படமான வலிமை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. மதியம் 2 மணிக்கு விஜய் சேதுபதி, காயத்ரி நடிக்க சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த மாமனிதன் திரைப்படத்தின் முதல் தொலைக்காட்சி ப்ரீமியர் காட்சி ஒளிபரப்பாக உள்ளது.
அன்னாபாரதி , புவி, முனிஷ்ராஜ், நக்ஷத்ரா மற்றும் பல பிரபல ஜோடிகளுடன் போட்டி போட்டி போட அர்ச்சனா தொகுத்து வழங்கும் சீதா ராமன் எனும் செலிபிரிட்டி கேம் ஷோ மாலை 4.30 ஒளிபரப்பாக உள்ளது.
அக்டோபர் 5ல் காலை 8.30 மணிக்கு விஜயதசமியை முன்னிட்டு ஜீவா, ஜெய், , ரைசா வில்சன், சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா மற்றும் திவ்ய தர்ஷினி ஆகியோரின் 'காபி வித் காதல்' படக்குழுவினருடன் காலை வேடிக்கையான நிகழ்ச்சியுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். காலை 9 மணிக்கு 'இன்றைய கல்வி முறை - பரிசா சாபமா' என்ற தலைப்பில் மற்றொரு சிறப்பு பட்டிமன்றம் கலைமாமணி சுகி சிவம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடடிப்பில் வெளியான 2022ன் குடும்ப பிளாக்பஸ்டர் நகைச்சுவைத் திரைப்படமான 'வீட்டில் விசேஷம்' காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும். மதியம் 1 மணிக்கு அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ராதிகா சரத்குமார் என பலர் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான மெகா ஹிட் திரைப்படமான “ யானை “ படத்தின் முதல் பிரீமியமர் காட்சியைக் கண்டு மகிழுங்கள்.
சேனலின் பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வியா.. செல்வமா.. வீரமா என்ற தனித்துவமான நிகழ்ச்சியுடன் பிரமாண்டமாக முடிவடைகிறது. ஆர்.ஜே.விஜய் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஜீ தமிழின் பிரபலமான சீரியல்களான மாரி, அமுதாவும் அன்னலட்சுமியும், வித்யா நம்பர் 1 சீரியல் ஜோடிகள் பங்கேற்க உள்ளனர்.