நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் என்னதான் பிரம்மாண்டமான கதைக்களங்களுடன் ஒளிபரப்பானாலும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக வரவில்லை என்றால் அது தோல்வியடைந்து விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும். அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த ஸ்டார் நடிகர்களை கொண்ட பல சீரியல்கள் கூட தொடங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டன. சில சற்று காலம் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்தன. ஆனால், கிட்டத்தட்ட 8 வருடங்களாக ரசிகர்களை கட்டிப்போட்டு சூப்பர் ஹிட் அடித்த தொடரான சந்திரலேகா, தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் புதிய சாதனையையே படைத்துள்ளது. அதிலும், ஸ்பெஷல் என்னவென்றால் இந்த தொடரின் இறுதி அத்தியாயம் வரை ஹீரோயின்கள் மாறவே இல்லை.
கிட்டத்தட்ட 2300 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடரானது தற்போது முடிவுக்கு வர உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இறுதி எபிசோடின் படப்பிடிப்பு தளத்தில் அந்த தொடரின் நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து நிற்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபகாலத்தில் தமிழ் சின்னத்திரை வரலாற்றில் இத்தனை எபிசோடுகளை கடந்த நெடுந்தொடர் எதுவுமே கிடையாது. லேகாவும் சந்திராவும் பல குடும்ப பெண்களின் உறவாகவும், தோழிகளாகவும் மாறிவிட்ட நிலையில் தற்போது அவர்கள் 'பேர்வல்' சொல்லியிருப்பது ரசிகர்கள் பலரையும் வருத்தமடைய செய்துள்ளது. என்னதான் புதுசு புதுசாக சீரியல்கள் வந்தாலும் மீண்டும் ஒரு சந்திரலேகாவுக்கு வாய்ப்பே இல்லை என்பதே ரசிகர்கள் பலரின் ஆதங்கமாக உள்ளது.