கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சின்னத்திரை ரசிகர்களை ஈர்க்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கையோடு சுற்றி வரும் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பல நிகழ்ச்சிகளை தயாரித்து வருகின்றனர். ரசிகர்களுக்கு பிடித்தமான சின்னத்திரை பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம் முதல் வளைகாப்பு வரை கூட இப்போதெல்லாம் டிஆர்பி கண்டண்ட்களாக மாற்றி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருமணமான ரவீந்தர் - மஹாலெட்சுமி மற்றும் முனீஸ்ராஜ் - ப்ரியா திருமண வைபவத்தை இரண்டு சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக தயாரித்துள்ளன.
ரவீந்தர் - மஹாலெட்சுமி காதல் திருமணம் பாடி ஷேமிங் கான்செப்ட்டுக்குள் சிக்கி சோஷியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்தது. அதுபோல, முனீஸ்ராஜ் - ப்ரியா காதல் திருமணமும் ராஜ்கிரண் வெளியிட்ட அறிக்கையில் பரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி 'வந்தாள் மஹாலெட்சுமி' என்கிற பெயரில் ரவீந்தர் - மஹாலெட்சுமி திருமணத்தை ரீ-கிரியேட் செய்து ஸ்பெஷல் ஷோவாக மாற்றியது. தற்போது போட்டி சேனலான ஜீ தமிழும் தன் பங்கிற்கு 'சீதா ராமன்' என்கிற பெயரில் முனிஸ்ராஜ் - ப்ரியாவுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே திருமணத்தை செய்து வைத்துள்ளது. அதன் புரோமோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிகழ்ச்சியானது வருகிற ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக உள்ளது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும், இந்நிகழ்ச்சிகளின் டிஆர்பி டாப் கியர் அடிக்கப்போவது உறுதி தான்.