2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய் டிவி நடிகையான ஆல்யா மானசா ராஜா ராணி தொடரின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலிலும் நடித்து வந்த ஆல்யா, பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். தற்போது தனது இரண்டு குழந்தைகளுடன் ஜாலியாக நேரம் செலவழித்து வருகிறார். அவரிடம் ரசிகர்கள் பலரும் எப்போது கம்பேக் என கடந்த சில நாட்களாக கேட்டு வந்தனர். அதற்கு, பழையபடி பிட்டாக வேண்டும் அதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் என ஆல்யா கூறியிருந்தார்.
இந்நிலையில், பிட்னஸூக்காக அவர் கடுமையாக பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாக்சிங் கோச்சுடன் கடுமையாக பயிற்சி செய்யும் ஆல்யா, 'சிறப்பான கம்பேக்கிறாக ஆல்யா ரெடியாகி வருகிறார்' என கேப்ஷன் போட்டுள்ளார். இதைபார்க்கும் ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.