அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு |

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்தாவது சீசனுக்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட் என்ற இன்னொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கமலைத் தொடர்ந்து சிம்புவும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் அதற்கு எதிர்பார்த்தபடி வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி தொடங்கப்போகிறது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கும் நிலையில் சமீபத்தில் இதற்கான முதல் புரோமோ வெளியானது.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன்- 6 நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல்ஹாசன், காட்டிலுள்ள மிருகங்களின் குணாதிசயங்கள் குறித்து பேசும் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களில் அழகிய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்து வந்த கமல்ஹாசன், இந்த ஆறாவது சீசனில் வேட்டையை ஆரம்பிக்கலாமா? என்று துவங்கியுள்ளார். மிருகங்களுடன் தெறிக்க விடும் டயலாக் பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் கமல். அதோடு, காடுன்னு ஒன்னு இருந்தா ராஜா என்று ஒருத்தர்தான இருக்க முடியும் என்ற டைட்டில் உடன் இந்த இரண்டாவது புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.




