இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் உள்ளத்தை அள்ளித்தா. வருகிற அக்டோபர் 10ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கெனவே முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஜமீலா என்ற தொடரை அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த தொடர் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்ணை பற்றிய தொடராக ஒளிபரப்பாக இருக்கறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் ஆட்டோ ஓட்டி, ஆட்டோ ராணி என்ற பெயரெடுத்துக் கொண்டு ஒரு பெண் எப்படி தன் குடும்பத்தை தனியொருத்தியாக நின்ற காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை களம் என்கிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதன் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் வேகமாக கொண்டு சேர்த்து பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாத கேரக்டராக ஆட்டோ ராணி கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் தொடராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.