குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது என்பது சமீபகாலமாக அதிகமாக நடந்து வருகிறது. இது ஒரு சமுதாய சீர்கேடு என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பிரபலங்களே மலிவான விளம்பரங்களுக்கு அதை செய்து பரப்பி வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கிற 24 வயது பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது பிரபல ஹிந்தி டி.வி தொடர் நடிகை கனிஷ்கா ஷோனியும் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருக்கிறார். தியா அவுர் பாத்தி ஹம் என்கிற சீரியல் மூலம் புகழ்பெற்றவர் இவர். இந்த தொடர் தமிழில் ‛என் கணவன் என் தோழன்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
சுயதிருமணம் குறித்து கனிஷ்கா கூறியிருப்பதாவது: தனிமை தான் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் நினைத்தபடி எந்த ஒரு ஆணையும் இதுவரை என் வாழ்நாளில் சந்திக்கவில்லை. அதனால் தனியாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன். திருமணம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல அதில் காதல், நேர்மை ஆகியவையும் இருக்க வேண்டும். நான் நிதானத்தோடும், தெளிந்த சிந்தனையோடும்தான் இதை செய்திருக்கிறேன். என்று கூறி உள்ளார்.