தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி |

சின்னத்திரை நடிகரான ராஜூ ஜெயமோகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மனதை வென்று டைட்டில் பட்டத்தை வென்றார். தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வலம் வருவார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இதுவரை அவர் எந்த தொடரிலும் கமிட்டானாதாக தெரியவில்லை. இதற்கிடையில் 'ராஜூ வூட்ல பார்ட்டி' என்கிற விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் ப்ரியங்காவுடன் ஆங்கராக கலக்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான எபிசோடில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் குழுவினர் கலந்து கொள்கின்றனர். அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ராஜூ, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கேரக்டருக்கு நானும் ஆடிஷனுக்கு போனேன். கடினமான உழைப்பாளி கதாபாத்திரம் என்பதால் உயிரை கொடுத்து நடித்தேன். ஆனால், கேமரா மேன் சட்டென கேமராவை ஆப் செய்துவிட்டு எனக்கு எக்ஸ்ப்ரஸன் வரவில்லை என்று கூறி ரிஜக்ட் செய்துவிட்டார். ஆனால், சீரியல் டெலிகாஸ்ட் ஆகி குமரனின் நடிப்பை பார்த்தால் அவரும் என்னை போல் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்புறம் எதுக்கு என்னை ரிஜக்ட் செய்தார்கள் என்று தெரியவில்லை' என்று நகைச்சுவையாக கூறி சைட் கேப்பில் குமரனை கலாய்க்கிறார்.
இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்திற்கு மட்டுமல்லாமல் ஜீவா கதாபாத்திரத்திற்காகவும் ஆடிஷன் செய்து ராஜூ பல்பு வாங்கியுள்ளார். இன்னும் இதுபோல என்னென்ன காமெடிகள் ஆடிஷனின் போது ராஜூவுக்கு நிகழ்ந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பலரும் இந்த வார எபிசோடை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 'ராஜூ வூட்ல பார்ட்டி' நிகழ்ச்சி ஞாயிறுதோறும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.