சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

விஜய் டிவி வீஜே ஜேக்குலின் தமிழ் ரசிகர்களின் பேவரைட் டிவி ஆர்டிஸ்ட் ஆவார். அவர் தற்போது உடம்பை குறைத்து பிட்டாக மாறுகிறேன் என ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வொர்க்-அவுட் வீடியோவும் சோஷியல் மீடியாவில் பரவி வைரலானது. இந்நிலையில், அவர் ஜிம்மில் தன்னை கொடுமைப் படுத்துவதாக காமெடியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'என்னை ரொம்ப கொடுமைப் படுத்துறாங்க. என்னால சுத்தமா முடியல. மூச்சு வாங்குது. வாந்தி வருதுன்னு சொன்னாலும் கொஞ்சம் கூட யோசிக்க மாட்றாங்க. வாந்தி தான எடுத்துட்டு வாங்கன்னு சொல்றாங்க. உள்ளுக்குள் நுரையீரலில் வலிக்குது. கேட்டா, இதெல்லாம் நார்மல்னு சொல்றாங்க. ஒரு 3 நாள் எந்திரிக்கவே முடியல. இன்னும் நிறைய இருக்கு. பார்ட் 2ல சொல்றேன்' என சொல்கிறார். ஜிம்மில் அவர் படும் கஷ்டத்தை காமெடியாக புலம்பித் தள்ளும் ஜேக்குலினை பலரும் ரசித்து கலாய்த்து வருகின்றனர். ஜேக்குலினின் ரசிகர் படையோ 'என் செல்லத்தை கொடுமைப்படுத்துறது எவன் டா?' என சோஷியல் மீடியாவில் போருக்கு கிளம்பி வருகின்றனர்.