என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
சின்னத்திரை நடிகையான தேஜஸ்வினி கவுடா தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' என்ற தொடரின் மூலம் அறிமுகமான தேஜஸ்வினி, தற்போது ஜீ தமிழில் 'வித்யா நம்பர் 1', விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். மிகக்குறைந்த நாட்களிலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள தேஜஸ்வினி பல இளைஞர்களின் காதல் தேவதையாகவும் மாறிவிட்டார்.
இந்நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் பிரபலமான அமர்தீப்புக்கும் தேஜஸ்வினிக்கும் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து மூன்று மொழி சின்னத்திரை ரசிகர்களும் அமர்தீப் - தேஜஸ்வினி ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.