டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
வீஜே பார்வதி தமிழ்நாட்டில் பலர் இதயங்களில் செலிபிரேட்டி என்ற அந்தஸ்தை பிடித்துவிட்டார். தைரியமான இவரது பேச்சும், நேர்மையும் பலரையும் ஈர்த்து வருகிறது. வீஜே, வீ-லாக்ஸ் என ஜாலியாக சுற்றி வரும் பார்வதி படங்களில் நடிக்கவும் தயாராகி வருகிறார். இன்ஸ்டாவில் இவரது போட்டோஷூட் எப்போதும் டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. விருமன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்காக மீடியா பிரபலங்கள் பலருடன் பார்வதியும் மதுரை சென்றிருந்தார். அங்கே அந்த நிகழ்ச்சிக்காக பட்டுத்தாவணி அணிந்துள்ள பார்வதி மதுரை வீதிகளில் நின்று ஹீரோயின் போல் போஸ் கொடுத்துள்ளார். பார்ப்பதற்கு செம கியூட்டாக இருக்கும் அந்த புகைப்படங்களை தாவணி சீரிஸ் என தனது பதிவிட்டுள்ளார்.
அதோடு, ‛‛இந்த 26 ஆண்டுகளில், பாரம்பரிய தோற்றத்தை நான் அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. எனது கலாச்சாரம், மரபுகளை நான் ஒருபோதும் விட்டுவிட முடியாது. இதோ நான் ஜும்கி, தாவணி, பல வண்ண பூக்களுடன்... மதுரை பொண்ணு... தமிழ் பொண்ணு'' என பதிவிட்டுள்ளார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் பார்வதியின் அழகை பாராட்டி பலரும் பாசிட்டிவாக கமெண்ட் அடித்து வருகின்றனர். அதில் ஒருவர் 'இனி ஆங்கரிங் வேண்டாம் பேசாம நடிக்க போங்க' என்று பதிவிட, அதற்கு பார்வதி, 'அப்படியே வந்து குடுக்குறாய்ங்க பாரு சான்ஸூ' என நக்கலாக பதிலளித்துள்ளார்.