Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அறந்தாங்கி நிஷாவை பளார் பளார் என அறையும் பரீனா

02 ஜூலை, 2022 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Fareena-slaps-Nisha

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி, மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் 4-வது சீசனை தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை அறந்தாங்கி நிஷா மற்றும் மா கா பா ஆனந்த் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர். அதேபோல் நடுவர்களாக நீயா நானா கோபிநாத் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் பங்கேற்று உள்ளனர். இந்நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், சின்னத்திரை நடிகை பரீனா அவரது கணவர் ரஹ்மான் உபைத் ஆகியோர் நடனமாடுகின்றனர். அதன்பின் கமெண்ட் அடிக்கும் அறந்தாங்கி நிஷா, பரீனாவை கிண்டல் அடிக்கிறார். அதற்கு டென்ஷனாகும் பரீனா, அடியேய் என கத்தி நிஷாவின் கன்னத்தில் அடிக்கிறார். தொடர்ந்து புரோமோவின் முடிவில் இருவரும் மாறி மாறி அடித்துக்கொள்கின்றனர். ஆரம்பமே அட்டகாசமா இருக்கும் இந்நிகழ்ச்சி ரசிகர்களின் கவனத்தை கட்டாயம் ஈர்க்கும் என நம்பப்படுகிறது. 'மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 4' ஜூலை 2 ஆம் தேதி முதல் சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
குஷ்பு தொடரில் புதிய ஹீரோகுஷ்பு தொடரில் புதிய ஹீரோ அடுத்த லெவலுக்கு சென்ற ராதிகா ப்ரீத்தி : குவியும் வாழ்த்துகள் அடுத்த லெவலுக்கு சென்ற ராதிகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Neutrallite - Singapore,சிங்கப்பூர்
05 ஜூலை, 2022 - 10:54 Report Abuse
Neutrallite ஆக...அறைதாங்கி நிஷா ஆயிட்டாங்கன்னு சொல்லுங்க...பத்து அஞ்சு வாங்குனாலும் ஒரு விளம்பரம்...
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
03 ஜூலை, 2022 - 06:41 Report Abuse
vadivelu நல்ல வேளை இரண்டு பெரும் அவிங்களாயிட்டார்கள், இல்லை இதை வச்சே ஒரு மாதம் நம்ம ஊடகங்கள் விவாதம் வச்சு கல்லா கட்டி இருப்பாங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in