ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சென்னையை சேர்ந்த நடிகையான லீசா எக்லேர்ஸ் மாடலிங் துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்தவர். இதுவரை தமிழில் 7 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இருப்பினும் இவரை தமிழ்நாட்டு ரசிகர்கள் அதிகம் பேரிடம் கொண்டு போய்ச் சேர்த்தது 'கண்மணி' தொடர் தான். தவிர டிக் டாக், இன்ஸ்டாகிராம் என ஆக்டிவாக இருக்கும் லீசா, புடவையை மடித்து கட்டி ஆடிய ஆட்டத்தை பார்த்து இன்றளவும் இளைஞர்கள் கிறங்கி போயுள்ளனர். போட்டோஷூட் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பீஸ்ட் பாடலுக்கு பூஜா ஹெக்டேவின் டிரெண்டிங் நடனத்தை அழகான அசைவுகளுடன், அழகை கட்டி சூப்பராக ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த வீடியோவில் லீசாவின் ஸ்ட்ரக்ச்சரை ரசிக்கும் இளசுகள் 'செஞ்சு வச்ச சிலை' என வர்ணித்து வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.