ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை தொகுத்து வழங்கியவர் கமல்ஹாசன். அதனை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியையும் முதல் மூன்று வாரங்கள் கமலஹாசனே தொகுத்து வழங்கினார். அதையடுத்து அவர் விக்ரம் படப்பிடிப்புக்காக சென்றுவிட்டதால், சிம்பு தொகுப்பாளராக தொடர்ந்தார். தற்போது கமல் நடித்து வந்த விக்ரம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில் பிக்பாஸ் ஆறாவது சீசனையும் கமல்ஹாசனை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அக்டோபர் 2ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 6 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. அதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய போட்டியாளர்களை தேர்வு செய்ய தொடங்கி விட்டதாகவும் விஜய் டிவி வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.