போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சினிமாவில் வெற்றி பெற்ற வேறுமொழி படங்கள் ரீமேக் செய்யப்படுவது போன்று தொலைக்காட்சி தொடர்களிலும் ரீமேக் அதிகரித்துள்ளது. பெங்காலி மொழியில் வெளியான தொடர் திரிணாயினி, இந்த தொடர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. அதன் பிறகு தற்போது மாரி என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த தொடர் விரைவில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.
இந்த சீரியலில் மாரி என்ற கதாபாத்திரத்தில் தெலுங்குவில் நாயகியாக நடித்த ஆஷிகா, தமிழ் பதிப்பிலும் நாயகியாக நடிக்கிறார். அபிதா மாரியின் அம்மாவாக நடிக்க டெல்லி கணேஷ் தாத்தா வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் வனிதா விஜயகுமார், பாண்டிராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மாரிக்கு நடக்க போவதை முன்கூட்டியே அறியும் ஒரு அபாரா சக்தி இருக்கிறது. ஆனால் இது இவருக்கு கடவுள் கொடுத்த வரமா சாபமா என்பதுதான் கதை.