சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி |
நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'எதிர்நீச்சல்'. பெண்களின் ஆளுமையை பறைசாற்றும் வகையில் புதிய கதைக்களத்துடன் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில், கனிகா, ப்ரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா ஆகியோருடன் வெள்ளித்திரை நடிகரான மாரிமுத்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கான வசனத்தை முன்னாள் சீரியல் நடிகை ஸ்ரீவித்யா எழுதி வருகிறார். மக்கள் மத்தியில் அனைத்து வகையிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர் தற்போது 100-வது எபிசோடை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம், வசனகர்த்தா ஸ்ரீ வித்யா ஆகியோருடன் நான்கு முன்னணி நடிகைகள் மற்றும் குழுவினர் இணைந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கொண்டாடியுள்ளனர். தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.