வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நாதஸ்வரம் தொடரில் அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்ரியா. தொடர்ந்து பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். ஸ்ருதிக்கும் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற அர்விந்த் சேகர் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனையடுத்து ஸ்ருதி நடிப்பதிலிருந்து முற்றிலுமாக விலகி கொண்டார். இந்நிலையில், இவர்களது திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் வைத்து கோலகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. முன்னதாக நடைபெற்ற பேச்சுலர் பார்ட்டியில் சின்னத்திரை பிரபலங்களில் நல்காரி ப்ரியங்கா, காவ்யா அறிவுமணி, அஸ்வந்த் திலக், பென்ஸி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்று போல கருப்பு உடையில் வந்து பேச்சுலர் பார்ட்டியில் ஆட்டம் போட்டுள்ளனர். தற்போது அர்விந்த் - ஸ்ருதியின் திருமண புகைப்படங்களுடன் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.