நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! |
நாதஸ்வரம் தொடர் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. தொடர்ந்து வாணி ராணி, கல்யாணப் பரிசு, பொன்னூஞ்சல் போன்ற தொடர்களில் நடித்தார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார். ஸ்ருதிக்கும், பாடி பில்டரும், உடற்பயிற்சியாளருமான அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் நேற்று எளிய முறையில் நடந்தது. திருமணத்தில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்தினர். ரசிகர்கள் இணைய தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.