மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை |

கோடை விடுமுறையை முன்னிட்டு, ஜீ தமிழ் சேனல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் புதிய படங்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் நாளை மறுநாள் (29ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) முதல் நீ முடிவும் நீ என்ற படத்தை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்புகிறது.
இசை அமைப்பாளர், நடிகர் தர்புகா சிவா இயக்கிய முதல் படம் இது. இதில் கிஷன் தாஸ், மீத்தா ரகுநாத், ஹரிஷ்குமார், வருண் ராஜன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். தர்புகா சிவா இசை அமைத்திருந்தார், சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. பள்ளி பருவத்தில் விளையாட்டான காதல், நட்பு, என்ற வாழ்ந்தவர்கள். பக்குமடைந்த வயதில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்கிற கதை. பள்ளி வாழ்க்கையை மீட்டெடுக்கும் உணர்ச்சி பூர்வமான படமாக இது வெளியானது