2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடித்து பிரபலமானவர் காஜல் பசுபதி. சமீபகாலங்களில் மீண்டும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். சோஷியல் மீடியா அனைத்திலும் ஆக்டிவாக இருக்கும் காஜல், சினிமா முதல் அரசியல் வரை அனைத்திலும் கருத்து சொல்லி கவனம் ஈர்த்து வருகிறார். அவரது நேர்மையான சில பதிவுகளுக்காகவே ரசிகர்கள் காஜலை பின் தொடர்ந்து வருகின்றனர். போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தி வரும் அவர், முன்னதாக சிவப்பு புடவையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது அவர் மறைந்த லெஜண்ட்ரி நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவாக அவரைப் போலவே போஸ் கொடுத்து படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், அதன் கேப்ஷனில் 'தலைவி போல எவளாலயும் வர முடியாது. இது ஒரு சின்ன ட்ரிபியூட்' என்று கூறியுள்ளார். காஜல் வெளியிட்ட புகைப்படமும், அவரது கேப்ஷனும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.