பாலகிருஷ்ணாவுடன் நடனம் : கிண்டலடித்த ரசிகர்களுக்கு ஊர்வசி ரவுட்டேலா பதிலடி | ஹனிரோஸ் புகார் விவகாரம் : ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் இருந்து வெளிவர அடம்பிடித்த நகைக்கடை அதிபர் | ரம்பாவின் ரீ-என்ட்ரியை வரவேற்கும் ரசிகர்கள் | தல பொங்கலை கொண்டாடிய அரவிஷ் - ஹரிகா, விக்ரமன் | ஹிந்தி நடிகர் சைப் அலிகானுக்கு கத்திக்குத்து : மருத்துவமனையில் அனுமதி | ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தாமரைச்செல்வி. இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற மாட்டேன் என்று கூறி கடைசிவரை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் தாமரைச் செல்வியின் தாய் குடிசை வீட்டில் வசித்து வருவது சமீபத்திய பேட்டி மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு வீடு கட்டி கொடுக்க முடிவு செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். பலரின் உதவியுடன் இந்த வீட்டை கட்டித்தர உள்ளதாக ஜேம்ஸ் வசந்தன் கூறி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.