மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! |
வானத்தை போல சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்து வந்தவர் ஸ்வேதா கெல்கே. பெங்களூரை சேர்ந்த ஸ்வேதா ஐடி துறையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தார். அதன்பின் சினிமா துறையில் கால்பதித்த அவர், சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால், திடீரென வானத்தை போல சீரியலை விட்டு விலகினார். இதற்கான காரணம் புரியாத நிலையில் ஸ்வேதாவை இனி பார்க்கவே முடியாதா? என ரசிகர்கள் வருந்தமடைந்தனர். இந்நிலையில் தற்போது ஸ்வேதா கெல்கே தமிழ் சின்னத்திரையில் புது சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ள செய்தியால் அவரது ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.
ஸ்வேதா கெல்கே கலைஞர் டிவியில் புதிதாக உருவாகி வரும் 'கண்ணெதிரே தோன்றினாள்' என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் கேஜிஎப் நடிகை மாளவிகா, 'எதிர்நீச்சல்' தொடரில் நடித்து வரும் அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த தொடருக்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'கண்ணெதிரே தோன்றினாள்' வருகிற ஜூன் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.