'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன். அதன் பின் சீரியலை விட்டு விலகிவிட்டார். அதேபோல் சினிமாவில் சூர்யாவுடன் 'ஸ்ரீ' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஸ்ருதிகா அர்ஜூன். பின் திரைத்துறையை விட்டு விலகி படிக்க சென்றுவிட்டார். இவர்கள் இருவருமே தற்போது சின்னத்திரையின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான 'குக் வித் கோமாளி சீசன் 3'ல் கலந்து கொண்டு கம்பேக் கொடுத்துள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது. இதன் மூலம் இந்த இரு நடிகைகளும் மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்நிலையில், பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறேன் என்ற பெயரில் செம காமெடி செய்துள்ளனர். ரோஷினி ஒரு திசையிலும் ஸ்ருதிகா ஒரு திசையிலும் வெட்ட வெயிலில் நின்று நடனமாடியுள்ளனர். அது பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருக்கிறது. நடனமாடும் போது இருவரும் செய்யும் சேட்டைகளும், நடன அசைவுகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.