ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

ஸ்ரீ, ஆல்பம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருத்திகா. திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஊடக வெளிச்சம் பெற்றார். சினிமா செட்டாகாத காலக்கட்டத்தில் படிப்பை தொடர்ந்த ஸ்ருதிகா, அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில், தன்னுடைய கணவர் குறித்து மிகவும் உருக்கமான பதிவை ஸ்ருதிகா அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛என்னுடைய சிரிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சிக்கு பின்னால் இருக்கக் கூடிய நபர் இவர்தான். கடவுள் எனக்கு கொடுத்த சிறந்த வரம். என்னுடைய சின்ன சின்ன வெற்றியை கூட பாராட்டி ஆனந்தப்படுவார். பெற்றோர் குழந்தையை பாராட்டுவது போல் இவர் என்னை பாராட்டுவார். மோசமான தருணங்களில் என் மீது அன்பு செலுத்துகிறார். தூண் போல எனக்கு உறுதுணையாக இருக்கிறார். அளவில்லாமல் காதலிப்பது எப்படி என்று இவரிடம் தான் கற்றுக்கொண்டேன். நான் இன்று இந்த இடத்தில் இருக்க இவரே காரணம்'' என தனது கணவர் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.




