அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா அர்ஜூன். சூர்யா நடித்த 'ஸ்ரீ' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஆல்பம், நளதமயந்தி, தித்திக்குதே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் சின்னத்திரைக்கு சென்றவர். அங்கு பிரபலமானார், தற்போது 'தி 50' என்ற ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் திடீர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஸ்ருதிகா அர்ஜூன் டிவி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி உள்ளார். கண்கள் வீங்கிய நிலையில் இருக்கும் தனது படத்தை வெளியிட்டு, இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் “இது கண் நோய் அல்லது மெட்ராஜ் ஐ இல்லை. எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்துள்ளது. அதிக காய்ச்சலால் அவதிப்படுகிறேன். இதனால் கண்களில் தொற்று ஏற்பட்டு கண்கள் வீங்கி காணப்படுகின்றன. கண்களை திறக்க கூட முடியவில்லை. அது போல் வயிற்றிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. வயிறும் வீங்கியுள்ளது. தற்போது அவரது உடல்நிலை மெல்ல தேறி வருகிறது. 'தி 50' ஷோவிற்கு மூன்று முதல் ஐந்து நாட்களில் திரும்பி வந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார்.