சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பிறகு நேற்றைய தினம் குக் வித் கோமாளி சீசன் 3-ன் இறுதிபோட்டி முடிந்து ஒளிபரப்பானது. இறுதிபோட்டியில் ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிராமி, க்ரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப் கலந்து கொண்டு போட்டியிட்டனர். 4 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் முதலிடத்தை பிடித்து குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது. நடிகர் தர்ஷன் ரன்னர்-அப் பட்டத்தையும், அம்மு அபிராமி இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தையும் வென்றுள்ளனர். இந்த சீசனின் ஆரம்பம் முதலே ஸ்ருதிகா அர்ஜுன் ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்தார். தற்போது அவர் டைட்டில் படத்தை வென்றதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.