'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாண்டியன் ஸ்டோர்ஸில் அருமையாக நடித்து கவனம் ஈர்த்த தீபிகா, முகப்பரு பிரச்னை காரணமாக சீரியலை விட்டு விலக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது கலர்ஸ் தமிழ் மற்றும் ஜீ தமிழ் ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஹிட் சீரியல்களில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஜீ தமிழின் சித்திரம் பேசுதடி சீரியலில் வீஜே தீபிகா நடிக்கிறார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில், தற்போது அவரது கேரக்டர் அறிமுகத்திற்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் ஜாவா பெராக் பைக்கில் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் தீபிகா. நகைக்கடையில் வளையலை மிகநூதன முறையில் திருடிவிட்டு ஸ்டைலாக நடந்து செல்கிறார். இந்த தொடரில் அவரது கேரக்டர் வடிவமைப்பு மிகவும் புதுமையாக இருக்கிறது. இதற்கிடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது தலைவியை திரையில் பார்க்கும் ரசிகர்கள் வீஜே தீபிகாவை கொண்டாடி புது ப்ராஜெக்டிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.