சிம்புவின் இரண்டு படங்களுக்கு இசை சாய் அபயங்கர்? | இன்று 'அமரன்' 100வது நாள் விழா | இன்றைய ரிலீஸ் - 10 படங்களில் 1 மட்டும் மிஸ்ஸிங் | இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் வீஜே தீபிகா. தமிழக இளைஞர்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தீபிகா, அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது கூறிய விஷயம் சர்ச்சையாக மாறியுள்ளது.
அதில், 'நான் பீரியட்ஸ் நாட்களில் கூட கோவிலுக்கு செல்வேன். பூஜை அறைக்கு செல்வேன். சாமி கும்பிடுவேன். என்னை பொருத்தவரை அவர் என்னுடைய சாமி, என்னுடைய அய்யனார். எனக்கு உடம்பு சரியில்லை அவ்வளவுதான். அவர் என்னை ஏற்றுக்கொள்வார். என்னை அவர் ஒருபோதும் ஒதுக்கமாட்டார். கடவுளே ஒதுக்காதபோது என்னை ஒதுக்க நீ யார்?. நான் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று சொல்ல உனக்கு உரிமையில்லை' என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டிக்கு சிலர் பாசிட்டிவாக வாழ்த்துகள் கூறினாலும் பலர் கடவுள் விஷயத்தில் இப்படி விளையாடக்கூடாது என அட்வைஸ் செய்து எச்சரித்து வருகின்றனர்.