பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'சேது'. விக்ரமுக்கு அடுத்தபடியாக அந்த படத்தில் அனைவரும் புகழ்ந்த கதாபாத்திர தேர்வு 'அபிதா' தான். உண்மையில் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க தேர்வாகி இருந்தவர் பிரபல வில்லி நடிகை ஷில்பா தான். ஆனால், பாலா போட்ட கண்டிஷனால் ஹீரோயின் வாய்ப்பை தவற விட்டு விட்டார்.
இதுகுறித்து ஷில்பா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், 'பாலா சார் ஆடிசனுக்கு தாவணி கட்டிட்டு வர சொன்னார். ஆடிசன் முடிந்தது பத்து நாள் கழித்து நீங்கள் படத்தில் நடிக்கிறீர்கள். படம் முடிய ஒரு வருடம் கூட ஆகலாம். ஆனால், அதுவரை நீங்கள் சீரியலில் நடிக்க கூடாது என்றார். எனக்கு அப்போது சீரியலில் அதிக வாய்ப்புகள் வந்தன. பல தொடர்களில் நடித்தேன். எனவே, சேது படத்தை மிஸ் பண்ணிவிட்டேன். ஆனால், இப்போதும் அது குறித்து எனக்கு கவலை எதுவும் இல்லை. ஏனெனில் சீரியலில் நான் பல வெரைட்டியான கேரக்டரில் தொடர்ந்து நடித்தேன்' என்று கூறியுள்ளார்.
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும், ஷில்பா சீரியல்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். இன்றளவும் தமிழ் சின்னத்திரையில் டாப் வில்லி நடிகைகளில் ஷில்பாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.