எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், அவர் தற்போது விக்ரம் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதை கேட்டதிலிருந்து பிக்பாஸ் வீட்டிலிருக்கும் வனிதா வருத்தத்தில் உள்ளார். அவர் தற்போது தன்னை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிடும் படி கேட்டுக்கொண்டார்.
கன்பென்ஷன் ரூமில் பிக்பாஸிடம் பேசிய வனிதா, 'நான் நிகழ்ச்சிக்கு வந்ததே கமல்ஹாசனுக்காக தான். அவர் எது சொன்னாலும் நான் கேட்டுப்பேன். அவர் இடத்தில வேறு யார் வந்து சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். வீட்லையும் என்னை எல்லோரும் டார்கெட் பன்றாங்க. எனக்கு இங்க இருக்க பிடிக்கல. என்னை தயவு செய்து வெளியில அனுப்பிடுங்க' என்று கேட்டுக்கொண்டார். அதன்பிறகு பிக்பாஸ் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் தொடர்ந்து நேற்றைய டாஸ்க்கில் சண்டை, சச்சரவு என போய் கொண்டிருக்கிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டார். இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில் கதவை திறங்க நான் வெளியே போகணும் என கத்துகிறார் வனிதா. அவரை மற்ற ஹவுஸ்மேட்ஸ் சமாதானம் செய்கின்றனர். பின்னர் பிக்பாஸ் அவரை உள்ளே அழைத்து பேசிகிறார். இதுதான் உங்கள் இறுதி முடிவா என கேட்க, வனிதாவும் நான் வெளியே போகிறேன் என கூற வனிதா வெளியேறுவது மாதிரி புரொமோ உள்ளது. இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா பாதியில் வெளியேறி விட்டார் என தெரிகிறது.
இதனிடையே கடந்த சீசனில் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எனவே, இம்முறையும் கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஏற்கனவே பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுக்கும், வனிதாவுக்கும் இடையே பிரச்னை எழுந்தது. இதனால் அந்த நிகழ்ச்சியை விட்டு வனிதா பாதியிலேயே வெளியேறினார்.