கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வானத்தைப் போல என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரின் ஹீரோ தமன் குமாரும் மற்றும் ஹீரோயின் ஸ்வேதா ஹெல்கேவும் சீரியலை விட்டு சமீபத்தில் விலகினர். அவர்களுக்கு பதிலாக நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் மான்யா ஆனந்த் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நன்றாக வரவேற்பை பெற்ற இந்த தொடர் தற்போது ஓவர் டிராமாவாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் நடித்து வந்த மற்றொரு நடிகரான சங்கரேஷ் குமாரும் விலகி விட்டார். ஹீரோவின் அத்தை பெண்ணான பொன்னியின் காதலனாக 'சரவணன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பொன்னியின் அம்மா, அவரது மகளை நாயகனாக சின்னராசுவுக்கு திருமணம் செய்து வைக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்பதால் பின்னாட்களில், இந்த கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் பெறும் என்றே கருதப்பட்டு வந்தது. ஆனால், சீரியல் தொடங்கிய நாளிலிருந்து எப்போதாவது மட்டுமே சரவணன் கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. எனவே, சங்கரேஷ் குமார் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை நேயர்களே கவனித்திருக்க மாட்டார்கள்.
தற்போது சங்கரேஷ் குமார் விலகியதையடுத்து இந்த சரவணன் கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகர் சந்தோஷ் என்பவர் நடிக்கிறார். இவர் 'பூவே பூச்சூடவா', 'அரண்மனைக் கிளி', 'அபி டெய்லர்' ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். இவரது நடித்த காட்சிகள் வருகிற மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய சரவணன் என்றி வானத்தைப் போல தொடரின் கதைக்களத்தை வேறுமாதிரியாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.