Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கல்யாண கோலத்தில் செந்தில் - ராஜலெட்சுமி : போட்டோஷூட் வைரல்

17 பிப், 2022 - 15:15 IST
எழுத்தின் அளவு:
Senthil---Rajalakshmi-photoshoot-goes-viral

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜோடியாக அறிமுகமாகி டைட்டிலை வென்றவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி. தற்போது திரைப்படங்களில் பின்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர். அதிலும், ராஜலெட்சுமி புஷ்பா படத்தில் பாடிய சாமி சாமி பாடல் உலக அளவில் வைரலாக ஒலித்து வருகிறது. இதற்கிடையில் செந்தில் கணேஷ் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் வெற்றி பெறவில்லை. அதேசமயம் கணவன் மனைவி இருவருமே தற்போது சில விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஹிட் சீரியல் ஒன்றில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தனர்.

பாடகர்களாக திரையில் அறிமுகமானவர்கள் தற்போது இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், போட்டோஷூட்டிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் செந்தில் மற்றும் ராஜலெட்சுமி கல்யாண கோலத்தில் அசத்தலான போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும் லைக்ஸ்களையும் அள்ளி குவித்து வருகின்றனர். மேலும், போட்டோக்களுக்கு அவர்கள் கொடுத்துள்ள கேப்ஷன்களும் இருவருக்குமிடையேயான காதலை பிரதிபலிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அனிதாவை விமர்சித்த பட தயாரிப்பாளர்அனிதாவை விமர்சித்த பட தயாரிப்பாளர் அதிர வைத்த அழகிகள்! வைரலாகும் சூப்பர் குயின் புரோமோ! அதிர வைத்த அழகிகள்! வைரலாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ramalingam Shanmugam - mysore,இந்தியா
24 பிப், 2022 - 10:24 Report Abuse
Ramalingam Shanmugam ஏன் இப்படி ஆளுக்கு ஆல் கொல்றிங்க
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20 பிப், 2022 - 05:11 Report Abuse
meenakshisundaram செந்திலும் சரளாவும் போல என்றல்லவா கூறவேண்டும் ?
Rate this:
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
19 பிப், 2022 - 04:22 Report Abuse
thonipuramVijay செந்திலும் கவுண்டமணியும் போல இல்வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in