பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

சிங்கப்பூரில் பல மியூசிக் ஆல்பங்கள் 'ஹிட்' கொடுத்து இளம் ரசிகர்களை வசீகரித்தவர். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல பரிணாமங்களில் தமிழ் சினிமாவில் பயணிக்கும் 'மியூசிக் டைரக்டர்' ஷபிர் பகிர்ந்து கொண்டவை:
இசையின் மீதான ஆர்வம்
12 வயது முதல் இசைக்கருவிகள் வாசிக்க துவங்கினேன். எழுதி இசையமைத்து பாடினேன். அப்போது கிடைத்த பாராட்டுகளால் இசை ஆர்வம் அதிகரித்தது. நண்பர்களோடு சேர்ந்து 'கான்செப்ட்' இசைக்குழுவை துவக்கினேன். தாய் சயானாபீ என்னை ஊக்கப்படுத்தினார்.
சினிமாவில் இசையமைப்பாளரானது
சிங்கப்பூரில் மியூசிக் ஆல்பம், வெப்சீரீசுகளுக்கு இசையமைத்துள்ளேன். அங்குள்ள தமிழர் ஒருவர் எனது பாடலை 'சகா' பட இயக்குனர் முருகேஷ்க்கு அனுப்பினார். அந்த பாடல் பிடிக்கவே இயக்குனர் என்னை தொடர்பு கொண்டார். 'சகா' மூலம் சினிமாவில் இசையமைப்பாளரானேன்.
இசையமைத்த படங்கள்
தமிழில் சகா, சங்கு சக்கரம், நீயா 2, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களுக்கும், தெலுங்கில் ராஜூ காரி காதி படத்துக்கும் இசையமைத்துள்ளேன். தமிழில் அருண் விஜய் நடித்துள்ள 'சினம்', 'அறிவான்' படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.
பாடல் எழுதும் அனுபவம்
வத்திக்குச்சி படத்தில் 'அம்மா வேக்மீ' பாடல் எழுதி பாடினேன். தெலுங்கிலும் பாடல் எழுதியுள்ளேன். தமிழில் பயன்படுத்தாமல் உள்ள பழமை சொற்களில் பாடல் எழுதி தற்போதைய 'டிரெண்ட்' இசையோடு இணைக்க விரும்புகிறேன்.
பாடகரானது எப்போது
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகும் முன்பே பாடகராகிவிட்டேன். 2013ல் வெளியான வத்திக்குச்சி படத்தில் 'அம்மா வேக்மீ அப்', 'அரி உன்னை', அதன்பின் அரிமா நம்பி படத்தில் 'யாரோ யார் அவள்', கடாரம் கொண்டான் படத்தில் 'கடாரம் கொண்டான்', நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் 'நெஞ்சமுண்டு' பாடல் பாடியுள்ளேன்.
இசை ரசனையில் சிங்கப்பூர் எப்படி
சிங்கப்பூர் இளைஞர்களுக்கு வெஸ்டர்னில் ஆர்வம். சிங்கப்பூர், தமிழகத்தில் மக்கள் புதிய ராகங்களை வரவேற்று ரசிக்க தவறுவது இல்லை.
நாட்டுப்புற இசையில் ஆர்வம்...
உண்டு. ஒரு மாதம் இதற்காக குஜராத், காஷ்மீர் சென்று வந்துள்ளேன். தமிழ் கலாசார இசையை சினிமாவில் கொண்டு வர ஆசை உள்ளது.
விருதுகள் பற்றி
சிங்கப்பூர் தமிழ் தேசிய பாடல் 'சிங்கை நாடு' எழுதி பாடினேன். 35 வயதுக்குட்பட்ட சாதனையாளருக்கு வழங்கப்படும் உயரிய தேசிய விருதான சிங்கப்பூர் 'யூத் அவார்டு' கிடைத்தது. மக்கள் விரும்பும் இசையை கொடுக்க வேண்டும். 'பேக்ரவுண்ட்' மியூசிக்கில் தனித்துவத்தை காட்ட வேண்டும்.
நடிப்பதில் ஆர்வம் இருக்கிறதா
நல்ல கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிகராகவும் நடிப்பேன். இருந்தாலும் இசையமைப்பாளர் என்பதிலே அடையாளம் காண விரும்புகிறேன்.