‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் |

கண்மணி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் சாம்பவி. தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள சாம்பவி, ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். அந்த சாப்பாட்டை அவர் சாப்பிடும் போது ப்ளாஸ்டிக் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்ட அவர், ஒரு வழியாக பெரிய ஆபத்தில்லாமல் ப்ளாஸ்டிக் துண்டை வெளி எடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த குறிப்பிட்ட ஹோட்டலிலோ அல்லது மற்ற ஹோட்டலிலோ சாப்பாடு ஆர்டர் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கும் படி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார்.




