தமன்னாவின் 36வது பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற மிருணாள் தாக்கூர்! | நிதி அகர்வாலை தொடர்ந்து கூட்டணி நெரிசலில் சிக்கிக்கொண்ட சமந்தா! | வெளிநாட்டு முன்பதிவில் 4 கோடி வசூலித்த விஜய்யின் 'ஜனநாயகன்' | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சதீஷ் : இன்னொரு ஹீரோ ஆதி சாய்குமார் | தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ஒரு பதவிக்கு அல்லாமல் சில பதவிகளுக்கு சேர்த்து போட்டியிடும் தயாரிப்பாளர்கள் | ஜன., 16ல் துவங்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி: விளம்பர துாதர் நடிகை மீனா | சென்னையை மறக்காத சிவராஜ்குமார் : தம்பி குறித்து உருக்கம் | 2025 : மிகவும் குறைந்து போன ஓடிடி நேரடி வெளியீடுகள் | படையப்பாவை பார்த்து ரசித்த நீலாம்பரி | பிளாஷ்பேக்: தமிழ் திரையுலகிற்கு டி எம் சவுந்தரராஜன் என்ற பாடகரை அடையாளம் காட்டிய “தூக்கு தூக்கி” |

புதிய படங்கள் வெளியாகும் போது அந்தப் படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் தியேட்டர்களுக்கு விசிட் போவார்கள். தமிழ், தெலுங்கு என பல சினிமாக்களிலும் இப்படி நடக்கிறது.
தெலுங்கில் கடந்த வாரம் வெளியான படம் 'லவ் ரெட்டி'. அப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்டி ராமசாமி. படத்தில் காதல் ஜோடியாக நடித்த அஞ்சன் ராமச்சந்திரா, ஷ்ரவானி கிருஷ்ணவேணி ஆகியோரை வில்லனாக நடித்த ராமசாமி பிரித்துவிடுவாராம்.
படம் முடிந்த பின் தியேட்டர் விசிட் ஒன்றிற்குச் சென்ற படக்குழுவினர் மேடையில் நின்றிருந்த போது படம் பார்த்து நடுத்தர வயது பெண்மணி ஒருவர் திடீரென மேடைக்கு வந்து ராமசாமியின் சட்டையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார். படக்குழுவினர் தடுத்தும் மீண்டும் எகிறி வந்து அவரை அடித்தார். அதனால், மேடையில் நின்றவர்களும், படம் பார்த்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஒரு பக்கம் அந்த நடிகரின் நடிப்புக்குக் கிடைத்த வெற்றி இது என்று சிலர் சொன்னாலும் அடி வாங்கும் அளவிற்கு நடித்துள்ளார் என்பது அதிர்ச்சிதான். தியேட்டர் விசிட் செல்லும் வில்லன் நடிகர்கள் இனி கவனமாக செல்ல வேண்டியது அவசியம்.