சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ படங்கள் எல்.சி.யூ (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) வகைகளில் அடங்கும். கூலி படத்திற்கு பிறகு எல்சியூ.,க்குள் அடங்கும் வகையில் ‛கைதி 2' படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையே எல்சியூ குறித்த ஒரு குறும்படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படம் குறித்து தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாடு தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த எல்சியூ உருவாதற்கு முன் என்ன நடந்தது, இது எப்படி உருவானது என தெரிவிக்கும் வகையில் லோகேஷ் இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு ‛சாப்டர் ஜீரோ' என பெயரிட்டுள்ளார். தற்பொழுது இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் 1 ஷாட், 2 கதைகள், 24 மணிநேரம் என இடம்பெற்றுள்ளது. இந்த குறும்படத்தின் நீளம் 10 நிமிடத்திற்குள் இருக்குமென சொல்லப்படுகிறது.