குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், முந்தை பிக்பாஸ் சீசன்களை ஒப்பிடும் போது, பிக்பாஸ் 5, ரசிகர்களை ஏமாற்றியது என்றே சொல்ல வேண்டும். எந்த ஒரு டாஸ்க்கும் விறுவிறுப்பு இல்லாமல் சென்றது. இந்நிலையில், விஜய் டிவி முந்தைய பிக்பாஸ் சீசன்களின் பிரபலங்களை வைத்து ஸ்பெஷல் ஷோ ஒன்றை நடத்தியுள்ளது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் தங்கள் பார்ட்னருடன் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில், சிநேகன் - கன்னிகா, சுஜா வருணி - சிவகுமார் , அனிதா சம்பத் - பிரபாகரன், ரம்யா என்.எஸ்.கே - சத்யா, சென்ராயன் - கயல்விழி, வேல் முருகன் - கலா, ஆர்த்தி - கணேஷ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் ஈரோடு மகேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் வேல்முருகன், 'ஒவ்வொரு மனைவிக்கும் அவங்களோட புருஷன் ஸ்டைலா, கெத்தா இருக்கணும்னு ஆசை இருக்கும். எனக்கு அப்படி எல்லாம் இருக்க தெரியாது. ஆனால், என் மனைவி என்னை அப்படியே ஏத்துக்கிட்டா' என்று சொல்லி கண்ணீர் மல்க நெகிழ்ச்சியாக பேசுகிறார்.
எங்க வீட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.