அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
உலக அளவில் புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சியை இந்தியாவில் தமிழில் முன்னணி சேனல் ஒன்று பிரம்மாண்டமாக தயாரித்து வழங்கியது. மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனை நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கு வெர்ஷனை நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்கினர். 30 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் 14 பேர் கலந்து கொண்டனர். அதில் 10 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தேவகி, கிருத்திகா, வின்னி மற்றும் நித்தியா ஆகியோரில் தேவகி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மாஸ்டர் செப் பட்டம் வென்றார். கடந்த நவம்பர் 14 ஆம் தேதியோடு இந்நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில் அடுத்த சீசன் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, மாஸ்டர் செப் 2 வது சீசன் வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரவண பிரசாத் கூறியுள்ளார். இரண்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா? என்பது குறித்து சரிவர தெரியவில்லை. செப் கௌஷிக், செப் ஆர்த்தி, செப் ஹரிஷீன் ஆகியோர் இரண்டாவது சீசனிலும் நடுவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.