அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
சின்னத்திரை சீரியல் ரசிகர்களை விஜய் டிவி பக்கம் திருப்பிய பெருமை 'கனா காணும் காலங்கள்' சீரியலையே சேரும். பள்ளி, கல்லூரி என மாணவர்களின் வயது பருவத்தை மையப்படுத்தி புத்தம் புதிய களத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இன்று விஜய் டிவியன் முகங்களாக வலம் வரும் கவின், ராஜு, சாய் காயத்ரி என பலரும் கனா காணும் காலங்களில் அறிமுகமானவர்கள் தான்.
தற்போது ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பிறகு கனா காணும் காலங்கள் புதிய சீசன் வரவுள்ளது. நேற்று, இந்த சீரியலுக்கான பூஜை நடத்தப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியல்களை தயாரித்த குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் இந்த சீரியலை தயாரிக்கிறது.
முந்தைய சீசன்களில் நடித்திருந்த ஆர்ஜே சிவகாந்த், வெற்றி ஆகியோர் திரைக்கதை எழுத்தாக்கத்தில் உதவி புரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், கனா காணும் காலங்கள் தொடரின் இந்த புதிய சீசன், விஜய் டிவியல் ஒளிபரப்பாகாது எனவும் வேறு சேனலில் ஒளிபரப்பாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.