எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை |
விஜய் டிவியின் ஹிட் காமெடி ஷோவான காமெடி ராஜா கலக்கல் ராணி போட்டியின் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்ற நிகழ்ச்சிகளை போலவே காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 10 ஜோடிகளுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் தங்களின் மனதுக்கு பிடித்தமான சின்னத்திரை பிரபலங்களை மீண்டும் பார்த்து ரசித்து வந்தனர். அதன்பிறகு பட வாய்ப்புகள், பிக்பாஸ் நிகழ்ச்சி என புகழ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நிகழ்ச்சியிலிருந்து விலகினர். இதனையடுத்து இந்த நிகழ்ச்சி விரைவாக முடித்து வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
தற்போது இறுதிப்போட்டியை சென்றுகொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் அரையிறுதி போட்டி கடந்த நவம்பர் 7 ஆம் தேதி நடைபெற்றது. அதில் முதல் நான்கு இடத்தை பிடித்துள்ள போட்டியாளர்கள் இறுதிபோட்டியில் மோதவுள்ளனர். முதல் இடத்தை வினோத் - ப்ரனிகா ஜோடியும், இரண்டாம் இடத்தை டிஎஸ்கே - சுனிதாவும், மூன்றாவது இடத்தை பாலா - ரித்திகாவும் பிடித்தனர். இதனையடுத்து நான்காம் இடத்தை பிடிப்பதற்கான போட்டியில் ராமர் - தீபா ஜோடிக்கும், ஜெயசந்திரன் - அர்ச்சனா குமார் ஜோடிக்கும் இடையே கடும் இழுபறி நடந்தது. இறுதியில் நிகழ்ச்சியின் நடுவர்கள் ராமர் - தீபா ஜோடியை இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுத்தனர்.
இவர்கள் யாரும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல. எனவே இறுதிப்போட்டி கடினமாகவும் மிகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.