அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக வடிவேலு கெட்டப் போட்டுள்ள ப்ரோமோ வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் சிவாங்கி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தி அனைவருக்கும் பிடித்தமான நபராக உருவெடுத்தார். இதனையடுத்து வெள்ளித்திரைக்கு சென்றுவிட்ட சிவாங்கி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என உச்சநட்சத்திரங்களுடன் நடித்து பிரபலமான நடிகையாகவும் மாறியுள்ளார்.
இந்நிலையில் சிவாங்கி விஜய் டிவியின் ஹிட் ஷோவான 'காமெடி ராஜா கலக்கல் ராணி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடில் 'ரோல் ஸ்வாப்' என்ற டாஸ்க் நடத்தப்படுகிறது. இதற்காக ஆண்கள் அனைவரும் பெண் வேடமும், பெண்கள் அனைவரும் ஆண் வேடமும் அணிந்து வர வேண்டும். அந்த வகையில் வடிவேலு நடித்து மிகவும் பிரபலமான துபாய் ரிட்டர்ன் கெட்டப்பை சிவாங்கி போட்டுள்ளார்.
இன்று (அக்டோபர் 31) வெளியாகவுள்ள அந்த எபிசோடின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதனை பார்க்கும் ரசிகர்கள் சிவாங்கியின் வடிவேலு கெட்டப்பை பார்த்து ரசித்து வருகின்றனர். இதனையடுத்து வடிவேலு கெட்டப்பில் இருக்கும் சிவாங்கியின் புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.