‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ஜி தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'கோகுலத்தில் சீதை' தொடர் சேனல் அளவில் நம்பர் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
டான்ஸ் மாஸ்டர் நந்தா, ஆஷா கெளடா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் தொடர் 'கோகுலத்தில் சீதை'. 400 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. என்ன தான் ரசிகர் பட்டாளம் இருந்தாலும் இதுநாள் வரையில் ஜி தமிழின் மற்ற சீரியல்களான செம்பருத்தி, சத்யா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி ஆகிய தொடர்கள் மட்டுமே அதிகமாக பிரபலமாகியும், டி.ஆர்.பி.,யிலும் முன்னணி இடங்களை பிடித்து வந்தன.
இந்நிலையில் தற்போது மற்ற ஜி தமிழ் சீரியல்களை ஓவர்டேக் செய்து 'கோகுலத்தில் சீதை' தொடர் சேனல் அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. தற்போது பரப்பாகி சென்று கொண்டிருக்கும் ‛மெகா திருமண வைபவம்' என்ற ஜி தமிழின் புதிய யுக்தியில் பல சீரியல்களில் குறிப்பிடும் படியாக சில திருமணங்கள் ஸ்பெஷல் எபிசோடுகளாக தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கோகுலத்தில் சீதை இதற்கு முன் எடுத்த டிஆர்பியை விட அதிகமாக எடுத்து ஜி தமிழின் நம்பர் 1 தொடராக தேர்வாகியுள்ளது.
இதனை சீரியலின் தயாரிப்பு நிறுவனம் தங்கள் இண்ஸ்டாகிராமில் பெருமையுடன் பகிர்ந்து சீரியலில் நடித்து வரும் நடிகர்களுக்கும் டெக்னீசியன் குழுவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த தொடரின் ரசிகர்கள் விரைவிலேயே தமிழில் ஒளிபரப்பாகும் ஒட்டுமொத்த சீரியல் டிஆர்பியிலும் நம்பர் 1 ஆக இடம்பிடிக்க வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.