'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்தியா முழுக்க நவராத்திரி திருவிழா நடக்கும் அதே காலகட்டத்தில் தெலுங்கானா பகுதியில் நடக்கும் 9 நாள் திருவிழா பதுக்கம்மா. இந்த நாட்களில் தெலுங்கனா பெண்கள், வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து இறைவனை வழிபடுவார்கள். வண்ண வண்ண உடைகள், ஆபரணங்கள் அணிந்து மகிழ்வார்கள். வண்ண மலர் கோலமாக இந்த விழா இருப்பதால் இதனை தெலுங்கான வண்ணவிழா என்றும் அழைப்பாளர்கள்.
பூக்களை கொண்டு கொண்டாடப்படுவதால் தெலுங்கானாவின் ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசமான பூக்களை கொண்டு, இத்திருவிழா வண்ணக்கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா தெலுங்கனாவின் கலாச்சார பெருமையை வெளிப்படுத்தும் அம்சமாக, அனைவராலும் போற்றப்படும் விழாவாகும்.
இந்த விழாவை பற்றிய தனிப் பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரகுமானும், இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனும் இணைந்து உருவாக்குகிறார்கள். மிட்டபள்ளி சுரேந்தர் பாடலை எழுதி உள்ளார். தெலுங்கானா ஜகுர்தி என்ற அமைப்பின் சார்பில் எம்எல்சி.கே.கவிதா இதனை தயாரித்துள்ளார்.
இப்பாடல் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.