'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
காதலித்து திருமணம் செய்து, நான்கு ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் பிரிவதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளனர். இதுப்பற்றி நாகசைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜுனா டுவிட்டரில், ‛‛கனத்த இதயத்துடன் இதை பகிர்கிறேன். சமந்தா - நாகசைதன்யா இடையே ஏற்பட்ட பிரிவு துரதிர்ஷ்டவசமானது. கணவன், மனைவி இடையே நடக்கும் விஷயங்கள் அவர்களின் தனிப்பட்டவை. அதில் தலையிட முடியாது. ஆனாலும் இருவரும் என்னுடைய பிரியத்திற்குரியவர்கள். சமந்தாவை எப்போதும் எங்கள் குடும்பம் ஆதரிக்கும். அவர் எங்கள் குடும்பத்தில் இருந்த ஒவ்வொரு தருணங்களும் மறக்க முடியாதது. இந்த நெருக்கடியான சூழலில் அவர்களுக்கு மனவலிமையை கொடுக்க கடவுளை வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.