ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி வெற்றி பெற்ற சுந்தர்.சி தற்போது அதன் மூன்றாம் பாகத்தை ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகிபாபு ஆகியோரை வைத்து இயக்கியிருக்கிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதோடு ஆயுத பூஜை தினமான அக்டோபர் 14-ந் தேதி அன்று அரண்மனை-3 திரைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமாக சுந்தர்.சி படங்களில் பெண்களே பேயாக நடித்து வந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யாவும் பேயாக நடித்துள்ளார். இதனால் இந்த டிரைலர் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ராஷி கண்ணா கவர்ச்சிகரமாக தோன்றுகிறார்கள். சத்யா இசையமைத்துள்ள இந்த படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். டிரைலர் வெளியாகி 24 மணிநேரத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.