நடிப்பில் வித்தியாசமான வேடங்களை ஏற்று வரும் பிரபுதேவா, தற்பேது முழு நீள ஆக்சன் படம் ஒன்றில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் இப்படத்தில், ஜான்விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், ஷாரிக் ஹாஸன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜான்பிரிட்டோ படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் கூறுகையில், ‛‛மாஸான ஆக்சன் படமாக உருவாகிறது. கிளைமாக்ஸ் ரசிகர்களின் கண்ணுக்கு புதுமையாக இருக்கும்,'' என்றார்.