சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

2013ம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படம் மலையாளத்தில் வரலாற்று சாதனை படைத்ததோடு, இந்திய சினிமாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோகன்லால், மீனா, ஆஷா சரத் நடித்த இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போஜ்புரி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், கொரியன், சீனா உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. அதுவும் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு விட்டது. தமிழில் மீண்டும் கமல் நடிப்பில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இதன் ஹிந்தி ரீமேக் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
த்ரிஷ்யம் முதல் பாக ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரேயா சரண் மற்றும் இஷிதா தத்தா நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்திலும் இவர்களே நடிக்கிறார்கள். இவர்கள் தவிர இரண்டாம் பாகத்தில் வந்த புதிய கேரக்டர்களுக்கான நட்சத்திர தேர்வு நடந்து வருகிறது. அபிஷேக் பதக் இக்குகிறார்.